சிவாஜி கணேசன் பிறந்த தினம் (அக்.1 1927)
சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார். சின்னையாப் பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.
எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
அவர் வாங்கிய முக்கிய விருதுகள்:-
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1997) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 331 - மகா அலெக்சாண்டர்
பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.
959 - முதலாம் எட்கார்
இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1787 - "சுவோரொவ்" தலைமையில்
ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில்
துருக்கியரைத் தோற்கடித்தனர்.
1788 - நியூவென் ஹியூ
வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.
1799 - புதுக்கோட்டை மன்னர்
விஜயரகுநாத தொண்டமானால்
வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.
1800 - ஸ்பெயின் லூசியானாவை
பிரான்சிடம் தந்தது.
1814 - நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.
1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம்
ஆர்மேனியாவின் தலைநகர்
யெரெவானைப் பிடித்தது.
1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
1869 - உலகின் முதல் தபால் அட்டை
ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
1880 - இந்தியாவுடனான
காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.
1887 - பிரித்தானியரினால்
பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.
1892 - இலங்கையில் இந்திய இரண்டு
அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.
1895 - பிரெஞ்சுப் படைகள்
மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.
1898 - ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள்
இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1918 - முதலாம் உலகப் போர் : அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.
1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர் :
நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.
1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
1960 - சைப்பிரஸ் , மற்றும் நைஜீரியா
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.
1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த
கம்யூனிசப் புரட்சி ஜெனரல்
சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.
1969 - கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.
1971 - வால்ட் டிஸ்னி உலகம்
புளோரிடாவில் அமைக்கப்பட்டது.
1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு
துவாலு என்ற பெயரைப் பெற்றது.
1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர்
பெலே இளைப்பாறினார்.
1978 - துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
1982 - சோனிநிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.
1992 - விடுதலைப் புலிகள்
கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
1994 - பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
பிறப்புகள்
1847 – அன்னி பெசண்ட் , ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933 )
1896 – லியாகத் அலி கான் , பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ.
1951 )
1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977 )
1906 – எஸ். டி. பர்மன் , இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975 )
1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ.
2006 )
1924 – ஜிம்மி கார்ட்டர் , அமெரிக்காவின் 39வது
அரசுத்தலைவர் , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1927 – சிவாஜி கணேசன் , தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001 )
1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்
1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009 )
1936 – கே. எஸ். சிவகுமாரன் , ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
1941 – சி. க. சிற்றம்பலம் , ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
1941 – செ. யோகநாதன் , ஈழத்து எழுத்தாளர் (இ. 2008 )
1956 – தெரசா மே , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
1958 – ஆந்தரே கெய்ம் , உருசிய-டச்சு இயற்பியலாளர்
இறப்புகள்
1404 – ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356 )
1973 – பாபநாசம் சிவன் , கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890 )
2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921 )
2010 – அவுதவின் தோல்பசு , பிரான்சிய வானியலாளர் (பி. 1924 )
2012 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி.
1917 )
2013 – டாம் கிளான்சி , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947 )
2014 – ராபர்ட் செரா , வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987 )
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் ( எல் சால்வடோர் ,
குவாத்தமாலா , இலங்கை )
விடுதலை நாள் ( சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
விடுதலை நாள் ( நைஜீரியா , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
விடுதலை நாள் ( பலாவு , 1994)
விடுதலை நாள் ( துவாலு , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
அனைத்துலக முதியோர் நாள்
உலக சைவ உணவு நாள்
தேசிய நாள் ( சீனா )
பன்னாட்டு காப்பி நாள்
பன்னாட்டு இசை நாள்
0 Comments