SBI புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல் !!
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது
வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு
வந்துள்ளது. இந்த புதிய விதிகள் நாளை (அக்.,1) முதல் அமலுக்கு வர
உள்ளது.நாளை அமலுக்கு வரும் விதிகள் : வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில்
கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புதொகையின் அளவை எஸ்பிஐ குறைத்துள்ளது.
இவை, மெட்ரோ நகரங்களில் இருப்பவர்களின் குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.5000
லிருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதி வங்கி கிளைகளில்
கணக்கு
வைத்திருப்போரின் குறைந்தபட்ச வைப்பு தொகை அளவு ரூ.2000
லிருந்து ரூ.1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வைப்புதொகைக்கும்
கீழான தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்போரிடம் இருந்து வசூலிக்கப்படும்
அபராதத் தொகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வைப்பு தொகையை பேணாத புறநகர் பகுதி மற்றும் கிராமப்புற கிளைகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.20 லிருந்து ரூ.40 ஆக்கப்பட்டுள்ளது. நகரம் மற்றும் மெட்ரோ கிளைகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ.30 லிருந்து ரூ.50 ஆக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச வைப்புதொகை கட்டாயம் என முறையிலிருந்து ஓய்வூதியதாரர்கள், அரசு நலத்திட்ட பயனாளர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மற்றும் பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச வைப்பு தொகையை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.
எஸ்பிஐ.,யில் 42 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளது. இவற்றில் 13 கோடி கணக்குகள் பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழும், அடிப்படை சேமிப்பு கணக்கின் கீழும் வருகின்றன. ஸ்டேட் வங்கியின் பல கிளைகள் எஸ்பிஐ உடன் இணைக்கப்படும் முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
*இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் பட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானர் மற்றும் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் அல்லது பாரதிய மகிலா வங்கி ஆகிய வங்கிகளின் செக்புக்.,கள் மற்றும் ஐஎப்எஸ் கோடு நாளை முதல் செல்லாது. இந்த கிளைகளின் ஐஎப்எஸ் கோடுகள் மாற்றப்பட உள்ளன.

0 Comments