மத்திய அரசின் பரிந்துரைப்படி,
அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணியும் திட்டத்தை, காந்தி
ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா என்ற, எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
நாடு முழுவதும், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு பல முயற்சிகளை
மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி
மாணவர்களுக்குகதர் சீருடைகள் வழங்க வேண்டும்; அரசு ஊழியர்கள், வாரத்தில்
ஒரு நாள், கதர் ஆடை அணிய வேண்டும்' என, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம்
கோரிக்கை விடுத்துள்ளது. இதை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீஹார்
உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள், அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே, விமான ஊழியர்கள் கதர் ஆடைகள்
வாங்க வேண்டும் என, மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.இந்தியாவில், பிரபலமான
தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தமும்
செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளி மாணவர்கள் கதர் சீருடை அணிய, அம்மாநில
அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நடைமுறையை, தமிழகத்திலும் கடைபிடிக்க வேண்டும்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டாவது, இந்த அறிவிப்பை, தமிழக அரசு அறிவிக்க
வேண்டும்.அனைத்து அரசு ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை அணிய
உத்தரவிட வேண்டும். இதனால், மக்களிடம் தேசப்பற்று வளர்வதோடு, நெசவாளர்களின்
வாழ்வாதாரம் பெருகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments