1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு
அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள்,ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி, ஆக.,௩௧ நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள், உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.


இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இதன்படி, தமிழ், ௧௮௦; கணிதம், ௧௨௧; இயற்பியல், ௨௪௧; வேதியியல், ௨௪௭; உயிரியல், ௩௩; தாவரவியல், ௯௬; வரலாறு, ௯௧;பொருளியல், ௨௦௮; வணிகவியல், ௩௮௩ இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர்,இளங்கோவன் பிறப்பித்து உள்ளார்.